search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளுக்கு பாலியல் தொல்லை"

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பிரமுத்துவிளையை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருடைய தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இதனால் இளம்பெண்ணின் தாயார் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தாயார் வேலைக்கு வெளியே சென்று விட்ட நிலையில், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, மகளை அடித்து உதைத்ததுடன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தாயார், கணவரிடம் இருந்து மகளை மீட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை கைது செய்தார். கைதான அவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

    கேளம்பாக்கம் அடுத்த கண்டிகையில் பெற்ற மகளுக்கு 5 வருடமாக பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கத்தை அடுத்த கண்டிகையைச் சேர்ந்தவர் காந்தி. வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியிருந்தார். இவரது 18 வயது மகள் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் காந்தி, வீட்டில் இருந்த மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி தாயிடம் கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அவள் தனக்கு நேர்ந்த கொடுமையை குறித்து யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    காந்தியின் அத்துமீறல் 5 வருடத்துக்கு மேலாக நீடித்துள்ளது. ஒரு கட்டத்தில் சகிக்க முடியாத காந்தியின் மகள், இது பற்றி தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவரை கண்டித்தார். ஆனால் காந்தி எதுபற்றியும் கண்டு கொள்ளவில்லை. மேலும் மனைவியையும், மகளையும் மிரட்டினார்.

    இது குறித்து காந்தியின் மகள் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சுப்பராஜ் உத்தரவுப்படி காந்தியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    கோவையில் மகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். நான் தந்தை பராமரிப்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தேன். எனது தந்தை 2-வதாக திருமணம் செய்து விட்டார். அவருக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நான் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து கல்லூரி சென்று வருகிறேன். எனது தந்தை எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுத்தார். இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்தனர்.
    ×